×

இந்துத்துவா, பாசிச சக்திகளை எதிர்க்கும் வீரராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் சிவசங்கர் பேச்சு

பெரம்பூர்: இந்துத்துவா, பாசிச சக்திகளை எதிர்த்து போராடும் வீரராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டமும் சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் 36 (அ) வட்டம் சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது; பேருந்துகளில் பெண்கள் இந்திய ஒன்றியத்தை இந்துத்துவா சக்திகள், பாஜக தங்கள் பிடியில் கொண்டு வரலாம் என்று துடித்துக்கொண்டிருக்கிற நேரத்தில் அதை எதிர்த்து கொள்கை ரீதியாக தலைமை வீரராக தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் திகழ்ந்துக் கொண்டிருக்கிறார்.சமூக நீதிக்கு அடையாளமாக மொழி உரிமைக்கு போராடுகின்றவராக மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு எதிரொலிக்கின்ற குரலாக தலைவர் இருக்கிறார். அவருக்கு கீழ் தொண்டர்களாக இருப்பதில் பெருமை அடைகிறோம். இன்று மிகப்பெரிய பாசிச சக்திகளின் எதிரான போரில் அவர் தலைமையில் திரண்டு பணியாற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தது பெருமையாக கருதுகிறோம். பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை மட்டுமல்ல பத்திரிகையாளர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசி இருக்கிறார்.  அவர் யாரையும் தனக்கு நிகராக கருதுவதில்லை. அவர் பதவியில் இருக்கின்ற பொழுது அதிகாரத்தில் இருந்திருக்கலாம். ஆனால் மக்களுக்கு பணியாற்றுகின்ற அரசியல் இயக்கத்தில் பணியாற்ற வந்துவிட்ட பிறகு இன்னும் அதிகாரி போதையில் பேசுவது தகுதியானது கிடையாது. இவ்வாறு பேசினார்….

The post இந்துத்துவா, பாசிச சக்திகளை எதிர்க்கும் வீரராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் சிவசங்கர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Hindua ,G.K. Stalin ,Minister ,Sivasankar ,Perampur ,Chief Minister of India ,G.K. Transport ,Stalin ,B.C. ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...