- கோவா
- ஷங்கர்
- எஸ் ரவிக்குமார்
- என்.லிங்குசாமி
- Mohanraja
- பிரபுதேவா
- ஜெகபதி பாபு
- மேகா ஸ்ரீகாந்த்
- மீனா
- சிம்ரன்
- சங்கவி

கடந்த 1990களில் திரையுலகில் பிரபலமாக இருந்த சீனியர்களின் ரீ-யூனியன், சமீபத்தில் கோவாவில் மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறியது. இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், என்.லிங்குசாமி, மோகன் ராஜா, பன்முக கலைஞர் பிரபுதேவா, நடிகர்கள் ஜெகபதி பாபு, மேகா ஸ்ரீகாந்த், நடிகைகள் மீனா, சிம்ரன், சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமாசென், மகேஸ்வரி, சிவரஞ்சனி ஆகியோர் கடற்கரை சந்திப்பில் பங்கேற்று, தங்களின் மறக்க முடியாத திரைப்பட அனுபவங்களை மனம்விட்டு பேசி மகிழ்ந்தனர்.
தென்னிந்திய திரையுலகில் பல வருடங்களாக பங்கேற்று, ரசிகர்களின் மறக்க முடியாத நினைவுகளில் கலந்துள்ள திரை நட்சத்திரங்களின் சந்திப்பு, அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது. அவரவர் ஊருக்கு திரும்பும்போது, மீண்டும் எப்போது சந்திப்போம் என்று, ஆனந்தக்கண்ணீர் வழிய ஒருவரிடம் ஒருவர் கேட்டுக்கொண்டனர்.
