×

ஹீரோவுக்கு டப்பிங் பேசிய இயக்குனர்

மகேஷ்,  அக்‌ஷிதா நடித்துள்ள படம், கறுப்பு ஆடு. இயக்கம், எம்.விஜய் மோகன். படம்  குறித்து அவர் கூறியதாவது: காதல் திருமணம் செய்துகொண்ட ஐஸ்  வியாபாரி மகேஷ், திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்படுகிறார். பிறகு தனது நோய்க்கான காரணம் தெரிந்ததும் அதிர்ச்சி  அடைகிறார். சமூகத்தை பாதித்து அழித்து வரும் அந்த நோயை கண்டுபிடித்து தீர்வு காண்கிறாரா என்பது கதை.

வெவ்வேறு படங்களில் பிசியாக இருப்பதால்,  தன்னால் டப்பிங் பேச முடியவில்லை என்று மகேஷ் சொன்னதால், அவருக்கு நான்  டப்பிங் பேசினேன். அக்‌ஷிதா தெலுங்கில் படம் இயக்கியுள்ளார் என்றாலும்,  எனது டைரக்‌ஷனில் நடிக்கும்போது, எந்தக் காட்சியிலும் அவர் தலையிட்டு  கருத்து சொன்னது கிடையாது.

Tags : Dabbing ,
× RELATED ‘பேட் பாய்ஸ் : ரைட் ஆர் டை – திரைவிமர்சனம்