×

படம் தாமதமாவதற்கு நான் பொறுப்பு அல்ல - செல்வராகவன்

சூர்யா, சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் நடித்துள்ள என்ஜிகே படம் நாளை  ரிலீசாகிறது. படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது:
நான் இயக்கியுள்ள அரசியல் படம் இது. ஒரு சாதாரண இளைஞன் அரசியலுக்கு வந்தால், எப்படிப்பட்ட பிரச்னைகள் வருகிறது? அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது கதை. இளைஞர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கக்கூடாது என்ற கருத்தை படம் சொல்கிறது.

தனிப்பட்ட கட்சிகள் மற்றும் நபர்களை பற்றிய கதை அல்ல. இன்றைய  பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் கதைக்களமாக இருக்கும். நான் இயக்கும்  படங்கள் தாமதமாக ரிலீசாவதாக சொல்வது உண்டு. எந்த படத்தின் தாமதத்துக்கும் நான் காரணம் இல்லை.

என்ஜிகே தாமதமானதற்கு சினிமா ஸ்டிரைக் உள்பட பல காரணங்கள் இருந்தது. நெஞ்சம் மறப்பதில்லை படத்தை நான் முடித்துக்கொடுத்து நீண்ட காலமாகிவிட்டது. அது ஏன் வெளியாகவில்லை என்று எனக்கு தெரியாது. தினமும் நான் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். சிறிதுகூட இடைவெளியும் இல்லை, ஓய்வும் எடுப்பது இல்லை.

Tags : Selvaraghavan ,
× RELATED வைகோ மீதான வழக்கு 4 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு