×

சேகு வாரா கெட்டப் ஏன்? செல்வராகவன் ரிப்ளை

அர்ஜென்டினாவில் பிறந்து டாக்டர் பட்டம் பெற்ற சேகுவாரா, ஏழை எளியவர்களை அதிகார வர்க்கம் அடிமைகள் போல் ஆட்டிப்படைப்பதைகண்டு புரட்சியாளராக மாறினார். ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். அவரது உருவப் படங்களை பிரின்ட் செய்து கொண்டு நம்மூரிலும் போராட்டக்கார்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை அவ்வப்போது காண முடிகிறது.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தில் சேகுவாராபோல் தொப்பி, கண்ணாடி அணிந்து மேக்அப் போட்டார். இது சேகு வாரா கதையா? என்று பட இயக்குனர் செல்வராகவனிடம் கேட்டதற்கு பதில் அளித்தார்.  ‘இது புரட்சியாளர் சேகு வாரா கதை இல்லை. ஆனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞன் அரசியல்வாதிகளின் அடாவடிகளை கண்டு பொங்கி எழுந்து அரசியலுக்கு வரும் கதையாக உருவாகியிருக்கிறது.

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கருத்தை என்ஜிகே படத்தில் முன் வைத்திருக்கிறேன். இப்படத்துக்காக சூர்யாவுக்கு தொப்பி வைத்து, கண்ணாடி அணிவித்த கெட்டப் பார்த்தபோது அது சேகு வாரா தோற்றம்போல் அமைந்துவிட்டது அவ்வளவுதான். சூர்யாவுக்கும் சரி, எனக்கும் சரி என்ஜிகே வித்தியாசமான படைப்பாக இருக்கும்’ என்றார்.

Tags : Selvaraghavan Rebel ,
× RELATED டபுள் ஐஸ்மார்ட் டீசர் வெளியானது