சென்னை: டாடா குழுமத்தின் தனிஷ்க் ஷோரூம், தனது சிறப்பு கலெக்ஷனான ‘தி சோழா’ நகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பம், பாரம்பரியம் ஆகியவை ஒன்றையொன்று எதிர்கொள்ளும் வகையில், சோழ வம்சம் உயிர்ப்பித்திருக்கும் அனுபவத்தை இந்த சோழா கலெக்ஷன்ஸ் தருகிறது. வேளச்சேரி மெயின்ரோட்டில் அமைந்துள்ள பலேடியம் மாலில், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு, பிரம்மாண்டமான கண்கவர் சோழா நகை தொகுப்பினை தேர்வு செய்து வாங்கலாம். இதன்மூலம், பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட சோழர்களின் காலத்துக்கு செல்லும் முப்பரிமாண அனுபவத்தை வாடிக்கையாளர்கள் நேரடியாக உணரலாம். இந்த நகைகள் இண்டராக்டிவ் தொழில்நுட்பத்திலான கியோஸ்க் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் நகைகள் கண்முன் விரியும் ‘சோழா புத்தகம்’ எனும் டிஜிட்டல் காட்சிப்பதிவு புத்தகம் மூலம் கைவினைத்திறனுடைய பல பிரிவுகள் மற்றும் சோழா தொகுப்பினை மிகச்சிறந்ததாக மாற்றும் செயல்முறையை எளிதாக அறியலாம். இதுபற்றி, தனிஷ்க் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளார் ரஞ்சனி கிருஷ்ணசாமி கூறுகையில், ‘‘இந்த சோழா நகை கலெக்ஷன்ஸ், இந்நாட்டின் பெண்களுக்காக மிகச்சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பொற்காலம், நகைகளின் இலக்கிய நயம், கட்டமைப்பு, கலையை போற்றும் நுட்பமான கைவினைத்திறன் ஆகியவற்றை நேரடியாக உணரவும், பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் ஒன்றாக இணைந்த இந்த ஆழ்ந்த அனுபவத்தை இதன்மூலம் காணலாம்.’’ என்றார்….
The post சோழர் கால அனுபவம் தரும் தனிஷ்க்கின் ‘தி சோழா’ நகை appeared first on Dinakaran.