×

665 வாக்குகள் பெற்று நோட்டாவிற்கு கீழே சென்ற நம்ம பவரு...

நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

இதில் 350 இடங்களில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. காங்கிரஸ் 92 இடங்களிலும் மற்றவை 100 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தென்சென்னை மக்களவை தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இவர் தேர்தல் பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில், தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் எந்தவித பிரச்சாரமும் செய்யாமல் பவர்ஸ்டார் சீனிவாசன் 665 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் இவரை விட குறைவாக 20 வேட்பாளர்கள் வாக்குகளை பெற்றுள்ளனர். மேலும் இந்த தொகுதியில் நோட்டாவிற்கு 16838 வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Noda ,
× RELATED திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத்...