×

திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு 24, 25ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து

திருமலை: திருப்பதியில் 24, 25ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு வரும் 24ம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 23ம் தேதியன்று பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது. மேலும் சூரிய கிரகண நாளான அக்டோபர் 25ம் தேதி(செவ்வாய்கிழமை) காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை 12 மணிநேரம் ஏழுமலையான் கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும்.  இதையொட்டி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால், முந்தைய நாளான 24ம் தேதி பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது. மேலும் நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணத்தன்று காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் கதவுகள் மூடப்படும். அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால், நவம்பர் 7ம் தேதியன்று பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது. வரும் 25ம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகண நாட்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடைக்கான தரிசனம்,  ரூ.300 சிறப்பு நுழைவு டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு 24, 25ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Tirupati Devasthanam ,VIP Darshan ,Tirumala ,Devasthanam ,Tirupati ,Tirumala Tirupati Devasthanam ,darshan ,
× RELATED கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை...