×

என்னை நானே ஹீரோவாக ஏத்துக்க மாட்டேன் : யோகி பாபு

கதையின்  நாயகனாக, எமதர்மன் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ள படம், தர்மபிரபு. சாம்  சுஜித், ஜனனி அய்யர், ரமேஷ் திலக், ராதாரவி, ரேகா, நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துள்ளனர். முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் யோகி பாபு பேசியதாவது:
இதில் எமதர்மனாக நடிக்கிறேன். தற்போதைய அரசியலை கிண்டல் செய்தும், விமர்சித்தும் காமெடியாகவும், சீரியசாகவும் படம் உருவாகியுள்ளது.

படத்தில் ஒருநாள் நடிக்க பல லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவதாக என்னைப் பற்றி சொல்கிறார்கள். 3 ஆயிரம், 4 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி நடித்து சினிமாவுக்குள் வந்தவன் நான். எல்லா தயாரிப்பாளர்களின் கஷ்டமும் எனக்கு தெரியும். அதனால், சம்பள விஷயத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

எனக்குப்  போட்டியாளராக யாரையும் நான் நினைக்கவில்லை. யாருமே இல்லாத கிரவுண்டில் தனி  ஆளாக விளையாட முடியாது. நிறையபேர் இருந்தால்தான் விளையாட முடியும். எனக்கு  நல்ல டீம் அமைந்ததால் சிக்ஸர் அடிக்கிறேன். என்னை நானே  ஹீரோவாக ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் எந்தப் படத்திலும் ஹீரோவாக  நடிக்கவில்லை. கதையின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன்.

Tags : Yogi Babu ,
× RELATED பிரபாஸ் சல்மானுக்கு பிறகே எனக்கு...