×

3டி படத்தை இயக்கும் மோகன்லால்

மலையாள சினிமாவில் ஹீரோக்கள் டைரக்டராகும் டிரெண்ட் உருவாகியிருக்கிறது. மோகன்லால் நடிப்பில் லூசிபர் படத்தை பிருத்விராஜ் இயக்கினார். இந்த படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பிருத்விராஜின் இயக்கத்துக்கும் பாராட்டுகள் குவிந்தது. இந்நிலையில் மோகன்லாலுக்கும் டைரக்‌ஷன் ஆசை வந்திருக்கிறது. தனது இயக்கத்தில் உருவாகும் புதிய பட அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்து வணிகத்தில் ஈடுபட்டபோது, ஏராளமான சொத்துகளை பணம், நகையாக சேர்த்தான்.

பிறகு இதை பாதுகாக்க பர்ரோஸ் என்ற சிப்பாயை நியமித்தான். இது கற்பனையான கதையாக சொல்லப்படுகிறது. இந்த கதையை நாவலாக வெளியிட்டுள்ளனர். இந்த நாவலை தழுவியே இப்படம் உருவாகிறது. படத்துக்கு பர்ரோஸ் என்றே தலைப்பு வைத்துள்ளனர். பர்ரோஸ் என்கிற சிப்பாய் வேடத்தில் மோகன்லால் நடித்து இயக்க உள்ளார். 3டியில் இந்த படம் உருவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அக்டோபரில் படத்தின் ஷூட்டிங் துவங்கும்.

Tags : Mohanlal ,
× RELATED ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில்,...