×

‘காக்கா முட்டை’ சிறுவன் ‘பிழை’

அரும்புமீசை குறும்பு பார்வை இளைஞனாகிவிட்ட காக்கா முட்டை பட சிறுவன் ரமேஷ் அடுத்து ‘பிழை’ படத்தில் நடிக்கிறார். இப்படியொரு டைட்டில் படத்திற்கு தேவையா என்றபோது இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஆர்.தாமேதரன் பதில் அளித்தனர். பிள்ளைகள் பெற்றோரை புரிந்துகொள்ளாத பிழை, பிள்ளைகளை பெற்றோர் புரிந்து கொள்ளாத பிழை, மாணவர்கள் ஆசிரியர்களை புரிந்துகொள்ளாத பிழை என பல பிழைகள் சிலரது வாழ்க்கையை மாற்றிப்போடுகிறது.

அந்த பிழைகளை திருத்தும் இப்படத்துக்கு பிழை பொருத்தமான டைட்டில். காக்கா முட்டை ரமேஷ், நசாத், ராகவேந்தரா சிரஞ்சீவி, தர்ஷினி, சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் நடிக்கின்றனர். பாக்கி ஒளிப்பதிவு. எப்.எஸ்.ஃபைசல் இசை. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சித்தூர், சோளிங்கர், திருத்தணியில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Tags :
× RELATED சினிமா நடிகர்களை கொண்டாடாதீர்கள்: பஹத் பாசில் அதிரடி