×

தோகைமலை பகுதியில் கோழிக்கொண்டை பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்-4 மாதம் வரை அறுவடை செய்யலாம்

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் கோழிக்கொண்டை பூசாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தோகைமலை பகுதிகளில் கடந்தசில வருடங்களாக மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, இட்லி பூஎன்ற விச்சிப் பூபோன்ற பல்வேறு மலர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதே போன்று கோழிக்கொண்டை பூசாகுபடியிலும் தற்போது விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். கோழிக்கொண்டை நடவு செய்த 2 மாதங்களுக்கு பிறகு பூ பூக்க தொடங்குவதாகவும், அதன் பின்னர் 3 முதல் 4 மாதங்கள் வரை தினமும் பூ க்களை பறிக்கலாம் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்றும், கோழிக்கொண்டை பூசெடிகளுக்கு எந்த மருந்துகளும் தெளிக்க வேண்டியதில்லை என்றும் சாகுபடிக்கான செலவீனங்கள் மிக குறைவு என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். தினமும் பறிக்கபடும் கோழிக்கொண்டை பூக்கள் திருச்சி பூமார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக கூறுகின்றனர். அங்கு சீசன் இல்லாத போது ஒரு கிலோ கோழிக்கொண்டை பூக்கள் ரூ.20க்கும், சீசன் உள்ளபோது 60 ரூபாய்வரை விற்பனை நடைபெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.  இதனால் அன்றாட செலவிற்கு பணம் கிடைப்பதாலும், சாகுபடிக்கு அதிக செலவு இல்லை என்பதாலும் தற்போது கோழிக்கொண்டை பூசாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்காட்டி வருகின்றனர்….

The post தோகைமலை பகுதியில் கோழிக்கொண்டை பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்-4 மாதம் வரை அறுவடை செய்யலாம் appeared first on Dinakaran.

Tags : Thokaimalai ,Kozhikonda Pusakupadi ,Karur district ,Tokaimalai ,
× RELATED தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 24ம் தேதி...