சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம். 6 விமானங்கள் இன்று திடீரென 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். நிர்வாக காரணங்களால் ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணம் என்று கூறினாலும் போதிய விமானிகள் இல்லாததால் விமானங்கள் இயக்க தாமதம் என தகவல்.
