×

2 கேரக்டர்களில் ஷில்பா மஞ்சுநாத்

காளி, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்த ஷில்பா மஞ்சுநாத், இரண்டு கேரக்டர்களில் நடிக்கும் படம், பேரழகி ஐ.எஸ்.ஓ. நீ என்ன மாயம் செய்தாய், மித்ரா ஆகிய படங்களில் நடித்த விவேக் ஹீரோ. தவிர சச்சு, சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், டெல்லி கணேஷ் நடிக்கின்றனர். எடிட்டர் பி.லெனின் உதவியாளர் விஜயன் தயாரித்து இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது: முதியவர்களை இளைமையாக்கும் ரகசியம் பழங்கால ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளது.

அது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கையில் கிடைத்து, சோதனை முயற்சியாக சச்சு பாட்டியிடம் செயல்படுத்தப்படுகிறது. உடனே சச்சு இளம் பெண்ணாக மாறுகிறார். அவரது பேத்தி ஷில்பா மஞ்சுநாத்துக்கும், அவருக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகள் மற்றும் கருப்பு நிறம், எது அழகு என்பது குறித்த சமூகப் பிரச்னையும் ேவடத்தில் பேசப்படுகிறது. சச்சுவின் இளமைத்ேதாற்றம், பேத்தி என இரண்டு கேரக்டர்களில் ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார்.

Tags : Shilpa Manjunath ,
× RELATED சிங்கப்பெண்ணே விமர்சனம்…