ஹீரோவுடன் காதலா? ரெஜினா கோபம்

தமிழ்,  தெலுங்கில் நடித்து வரும் ரெஜினா, இதற்கு முன் ஒரு சில நடிகர்களுடன்  இணைத்து கிசு கிசுக்கப்பட்டார். அப்போதெல்லாம் அந்த தகவல்களை அவர் மறுத்து  வந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தெலுங்கு ஹீரோ சாய் தரம்  தேஜுடன் காதல் என வந்த தகவலை பற்றி வாய் திறக்காமல் இருந்தார் ரெஜினா. ஆனால் சாய் தரம் தேஜ் இதை மறுத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் இவர்களை இணைத்து கிசு கிசு கிளம்பியது. இருவரும் சேர்ந்து 2 படங்களில்  நடித்துள்ளனர். அப்போது முதல் காதலில் விழுந்திருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பு இருக்கிறது. இது பற்றி இப்போது ரெஜினாவும் கோபமாக  பதிலளித்துள்ளார்.

‘எத்தனை முறைதான் இப்படியெல்லாம் வதந்தி கிளப்புவார்கள்  என தெரியவில்லை. யாருடனும் நான் காதலில் விழவில்லை. இப்போதைக்கு எனது  வேலையை மட்டும்தான் நான் காதலிக்கிறேன். சினிமாவை தவிர எனது கவனம் எதிலும்  இல்லை. என்னுடன் நடித்தவருடன் என்னை இணைத்து பேசுவதை இத்துடன்  நிறுத்திக்கொள்ளுங்கள்’ என கோபமாக பதிலளித்துள்ளார்.

Related Stories: