×

ரஜினி மகளாக நிவேதா; வில்லனாக எஸ்.ஜே.சூர்யா

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் வரும் 10ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. அப்போதே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுகிறது. இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் கொடி பறக்குது படத்தில் ரஜினி போலீசாக நடித்திருந்தார். அந்த படம் 1988ல் வெளியானது. 30 வருடம் கழித்து மீண்டும் இப்போது அவர் போலீஸ் கேரக்டரில் இதில் நடிக்கிறார்.

படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதில் முக்கிய வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். இவர் பாபநாசம் படத்தில் கமல் மகளாகவும் ஜில்லா படத்தில் விஜய் தங்கையாகவும் நடித்தவர். இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Tags : Nivedha ,Rajini ,villain ,SJ Surya ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு ரஜினி வாழ்த்து..!!