×

விஜய் பட ஷூட் ஷிஃப்ட்டிங்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தையடுத்து இயக்குனர் அட்லீ இயக்கும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. படப்பிடிப்பு எந்த இடத்தில் நடக்கிறது என்பதை மன்றத்தினர் வாயிலாக தெரிந்துகொண்டு அங்கு ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.

வெகுநேரமாக ரசிகர்கள் தன்னை பார்க்க காத்திருப்பதாக படப்பிடிப்பிலிருந்த விஜய்க்கு தெரியவர அவர் தனது விலையுயர்ந்த காரை எடுத்துக்கொண்டு ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு வந்து அவர்களை நோக்கி கையசைத்துவிட்டு சென்றார். சென்னையில் படப்பிடிப்பு நடப்பதால் ரசிகர் கூட்டம் அதிகமாகி அன்புத்தொல்லை பெருகிவிட்டதால் படப்பிடிப்பு வெளி ஊருக்கு ஷிஃப்ட்டாகிறது.

Tags : Vijay Image Shoot Shifting ,
× RELATED ரத்னம் விமர்சனம்