×

வெயிட்போட்ட படத்தை வெளியிட்ட பாவனா

ஹீரோயின்கள் பெரும்பாலும் தங்கள் உடல்தோற்றம் குண்டானால் அப்படத்தை நெட்டில் வெளியிடுவதில்லை. ஸ்லிம்தோற்றத்துக்கு மாறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளுவார்கள். அவர்களிலிருந்து மாறு பட்டிருக்கிறார் பாவனா. சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங் களில் நடித்த அதே பாவனாதான்.  கடந்த 2010ம் ஆண்டு அஜீத்துடன் அசல் படத்தில் கடைசியாக தமிழில் நடித்தார் பாவனா. அதன்பிறகு மலையாளம், கன்னட படங்களில் கவனம் செலுத்தினார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாவனா சென்ற ஆண்டு தனது பாய்பிரண்டும், கன்னட பட தயாரிப்பாளருமான நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து மலையாள படங்களில் நடிப்பதையும் கைவிட்டு கன்னட படங் களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டில் 2 கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ஹிட்டான 96 படத்தின் கன்னட ரீமேக்காக உருவாகும் 99 படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

திருமண ஆன சந்தோஷத்தில் பாவனா தனது ஸ்லிம் தோற்றத்திலிருந்து மாறி யிருக்கிறார். சில மாதங்களாகவே அவர் இணைய தளத்தில் அமைதி காத்து வந்தார். இந்நிலையில் தனது புதிய படங்களை வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற லெஹங்கா டிரஸ் மற்றும் சிவப்பு நிற சேலை, அதேநிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்து கொழுக்மொழுக் தோற்றத்தில் இருக்கிறார் பாவனா.

Tags : Bhavana ,
× RELATED “கோரிக்கைகள் உண்மையானவை…” பாவனா...