×

தமிழுக்கு வரும் மற்றொரு சூப்பர் ஹீரோ

ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ கேரக்டர்களுக்கும் படங்களுக்கும் பஞ்சமில்லை. இப்போது புதிய சூப்பர் ஹீரோவாக ஹாலிவுட்டில் உருவாகியுள்ள படம் ஷாஸாம். பேய் கதையான அனபெல்லே படத்தை இயக்கிய டேவிட் சான்ட்பெர்க் இந்த படத்தை இயக்கியுள்ளார். எல்லோருக்குள்ளும் ஒரு சூப்பர் ஹீரோ இருக்கிறான். அதை சந்தர்ப்பம் எப்படி வெளியே கொண்டு விடுகிறது என்பதுதான் இந்த படத்தின் சாரீம்சம்.

படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அக்வாமேன் படத்துக்கு ஆக்‌ஷன் காட்சிகளை அமைத்த டீம், இதிலும் பணியாற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வரும் ஏப்ரல் 5ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது.

Tags : superhero ,
× RELATED பச்சோந்திகளை பத்தி விட்டுட்டு, சசிகலா...