×

டேரோட் – திரைவிமர்சனம்

ஸ்கிரீன் ஜெம்ஸ், அலாய் என்டர்டைன்மென்ட் மற்றும் கிரவுண்ட் கண்ட்ரோல் தயாரிப்பில்
சோனி பிக்சர்ஸ என்டர்டைன்மென்ட் இந்தியா வழங்கும் ஹாரர் படம் டேரோட்.
அறிமுக இயக்குனர் ஸ்பென்சர் கோஹன் மற்றும் ஆனா ஹால்பெர்க் இயக்கத்தில் ஹாரியட் ஸ்லேட்டர்,அடெய்ன் பிராட்லி, அவந்திகா, உல்ஃப்கேங் நோவோகிராட்ஸ், ஹம்பர்லி கொன்சால்ஸ் நடித்திருக்கும் ஹாரர் திரைப்படம்.

கல்லூரி நண்பர்கள் குழு தங்களது இரவு பார்ட்டியின் ஒரு அங்கமாக தங்களது டேரோட் கார்டுகளை படிக்கத் துவங்குகிறார்கள். அதன் விளைவாக ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு வரும் டேரோட் காட்டுகளை அடிப்படையாக வைத்து அவர்களின் மரணம் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து அமானுஷ்யங்களின் ஆட்டமும், திகில் தருணங்களும் ஒருசேர இளைஞர்கள் குழு என்ன ஆனது எப்படித் தப்பித்தார்கள் என்பது மீதி கதை.

ஹாலிவுட்டிலிருந்து எத்தனையோ ஹாரர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று என்று கடந்து விடாமல் சீரியஸ் ஆகவே எடுத்துக்கொண்டு பல காட்சிகளில் பயமுறுத்துகிறார்கள். படம் முழுக்க ஒரே வீட்டிற்குள் அடைந்து விடாமல் ஹாரர் பயத்தை வீட்டிற்கு வெளியில் காண்பித்த விதத்தில் இந்த படம் மேலும் கவனம் பெறுகிறது.

லிஃப்ட்டில் பயமுறுத்தும் ஜோக்கர் , பயங்கரமான மேஜிக் மேன், ஓடவிடும் பேய் என பட்ம முழுக்க வித்யாசமான ஹாரர் மொமென்ட்கள்.

நடிகர்கள் குழுவும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக பயன்படுத்தி காட்சிகளில் கவனம் பெறுகிறார்கள். எல்லி ஸ்மோல்கிங், ஒளிப்பதிவில் பயமுறுத்தும் இருட்டு காட்சிகளும், விரட்டும் அமானுஷ்ய உருவங்களும் நம்மையும் மிரட்டுகின்றன. ஜோசப் பிஷாரா பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக லிஃப்ட் காட்சிகளில் வரும் சிரிப்பொலி நம்மையும் பயமுறுத்தும்

மொத்தத்தில் சமீப காலத்தில் ஒரு நல்ல ஹாரர் திரைப்படம் பார்க்க விரும்பும் ஹாலிவுட் ஹாரர் ரசிகர்கள் இந்த டேரோட் படத்தை தேர்வு செய்யலாம்.

The post டேரோட் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sony Pictures Entertainment India ,Alloy Entertainment ,DEBUT ,SPENCER COHEN ,ANA HALBERG ,HARIOT SLATER ,ADEINE BRADLEY ,AVANTIKA ,WOLFGANG NOVOGRADES ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தேசிய விருது பிரிவுகளில் இந்திரா...