×

மீண்டும் நடிக்கிறார் சுவாதி

விஜய்யுடன் தேவா, வசந்த வாசல், செல்வா, அஜீத் குமாருடன் வான்மதி உள்பட 25 படங்களில் நடித்தவர் சுவாதி. கடைசியாக 2009ல் யோகி படத்தில் நடித்த அவர், தொழிலதிபர் கிரண் என்பவரை திருமணம் செய்த பிறகு ஐதராபாத்தில் குடியேறினார். அவருக்கு 5 வயதில் விஹான் என்ற மகன் இருக்கிறான். அவர், மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சினிமாவை  மிகவும்  நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்தை மதித்து, மீண்டும்  நடிக்க வந்துள்ளேன். இதற்கு என் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்’ என்றார்.

Tags : Swathi ,
× RELATED கர்நாடகாவில் காஸ் கசிந்து தம்பதி 2 மகள்கள் உயிரிழப்பு