×

சிக்ஸ் பேக்கிற்கு மாறும் விஜய் ஆண்டனி

விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, தனுஷ், விஷால் போன்ற ஹீரோக்கள் சிக்ஸ்பேக் உடற்கட்டுக்கு மாறி நடித்தனர். தற்போது சிக்ஸ்பேக் மோகம் குறைந்திருக்கும் நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி அந்த பார்முளாவை கையிலெடுத்திருக்கிறார்.

‘வாய்மை’ படத்தை இயக்கிய செந்தில்குமார் அடுத்து ‘காக்கி’ படம் இயக்குகிறார். இதில் விஜய் ஆண்டனி, ஜெய் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஏற்கெனவே சில படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்த விஜய் ஆண்டனி மீண்டும் இப்படத்தில் காக்கி அணிந்து நடிப்பதுடன் முதன்முறையாக சிக்ஸ் பேக் உடற்கட்டு தோற்றத்துடன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் சத்யராஜ், ஈஸ்வரிராவ், யோகி பாபு, ரோபோ சங்கர் நடிக்கிறார்கள். கதாநாயகிகள் தேர்வு நடந்து வருகிறது. தமிழினி, லிங்கவேலன், சுகதேவ், முத்துலட்சுமி தயாரிப்பு. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு. அகத் இசை. பாடல்கள் வைரமுத்து.

Tags : Vijay Antony ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch