×

ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’133 பிரபல ரவுடிகள் அதிரடி கைது

சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’ மூலமாக 133 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பிரபல ரவுடிகளை ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை‘ மூலமாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 133 பிரபல ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து, டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுதுவம் நடத்தப்பட்ட ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை‘ மூலமாக நேற்று மட்டும் 133 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை வழக்குகளில் பிடி ஆணை நிலுவையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்தும் பிடிபடாமல் இருந்த பிரபல ரவுடிகள் 13 பேர் மற்றும் ஏ-பிளஸ் ரவுடிகளும் சிக்கியுள்ளனர். மேலும், இவர்கள் மீது பல கொலை, கொள்ளை, நில அபகரிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும், பிடிபட்ட மற்ற 105 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’ மூலமாக ரவுடிகளை பிடிக்க காவல்துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். …

The post ஆபரேஷன் ‘மின்னல் ரவுடி வேட்டை’133 பிரபல ரவுடிகள் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Operation ,Hunt ,Chennai ,Lightning raider hunt ,Tamil Nadu ,Raid Hunt ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...