×

புது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 70வது சந்திப்பு: அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு

சென்னை: புது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 70வது சந்திப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன் பங்கேற்றார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், வல்லுநர்கள் படித்துள்ளனர். அந்த கல்லூரியில் மாணவர்கள் உறவை வலுப்படுத்தும் வகையில் அங்கு  மாணவர் சங்கம் செயல்பட்டு வருகிறது.  அந்த வகையில் நேற்று முன்னாள் மாணவர்கள் சங்கத்தினரின் 70வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களான தற்போதுள்ள ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், தற்போதைய ராஜ்ய சபா உறுப்பினரும், தமாகா தலைவருமான ஜி.கே.வாசன், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் டபிள்யூ.வி.ராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அதேபோல், புது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் இலியாஸ் சேட், நஜிமுத்தீன் உள்பட முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். …

The post புது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 70வது சந்திப்பு: அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Pudu College ,Alumni Association 70th Reunion ,Minister ,Periyakaruppan ,Chennai ,Periya Karuppan ,Pudu College Alumni Association ,Rayapetta, Chennai… ,Alumni ,Association ,70th Reunion ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...