×

தமிழ் படங்களுக்கு ஆங்கில தலைப்பு ஏன்: கயிலன் டிரைலர் விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு

சென்னை: பிடிகே பிலிம்ஸ் சார்பில் பி.டிஅரசகுமார் தயாரிக்க, அருள் அஜித் இயக்கியுள்ள படம், ‘கயிலன்’. ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, கு.ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர் இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ், கே.ராஜன், கவுரவ் நாராயணன், தனஞ்செயன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

கே.பாக்யராஜ் பேசுகையில், ‘இங்கு கே.ராஜன் பேசும்போது, தமிழில் பெயர் சூட்டுவது பற்றி குறிப்பிட்டார். நான் நடித்து இயக்கிய படத்துக்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்று பெயர் வைத்திருந்தேன். பிறகு நான் இயக்கி நடித்த ‘மௌன கீதங்கள்’ படத்தில் ‘டாடி டாடி’ என்ற பாடலையும், அத்துடன் ‘பேட்டா பேட்டா மேரா பேட்டா’ என்ற இந்தி வரியையும் வைத்திருந்தேன். சினிமா என்பது மக்களுக்கானது. மக்களுக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என்ற நோக்கம்தான் இதற்கு காரணம். அதை தவிர்த்து, தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் இல்லை. எங்களுக்கு தமிழ்தான் சோறு போடுகிறது’ என்றார்.

Tags : K. Bhagyaraj ,Arul Ajith ,P.D. Arasakumar ,PDK Films ,Shivatha ,Ramya Pandian ,Prajin ,Manobala ,Ku. Gnanasambantham ,Abhishek Joseph ,Anupama Kumar ,Amin ,Karthik Harsha ,Hari S.R ,
× RELATED தீபிகா படுகோனேயுடன் லெஸ்பியனாக நடிக்க ஆசை: கிரித்தி சனோன் பகீர்