×

ரசிகரின் கேள்வியால் ஆத்திரமடைந்த கெனிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். கடந்தாண்டு தனது மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்தை அறிவித்தார். தற்போது ரவி மோகன், ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து வழக்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இருவருக்குமிடையில் சமீப காலமாக கருத்து மோதல் நிலவி வந்தது. இதற்கிடையில், பாடகி கெனிஷா என்பவருடன் ரவிமோகன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு, கெனிஷா எனது தோழி மட்டுமே என ரவி மோகன் விளக்கமளித்திருந்தார். தற்போது சொந்த வீட்டில் இருந்து வெளியே வந்து வாடகை வீட்டில் வசித்து வரும் ரவி மோகன் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் தனது மகன்களை அழைத்து அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அந்தவகையில் கடந்த ஞாயிற்றுகிழமை அவரின் மூத்த மகன் ஆரவ் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு மகன்களையும் ரவி மோகன் தனது வீட்டிற்கு அழைத்து பிறந்தநாள் கொண்டாடினார். அதன் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரவி மோகன் அதில், ‘‘எனது பெருமை, எனது அனைத்து பருவம், எனது இரண்டு குறும்பாஸ்’’ என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். ஆரவ், ரவியுடன் இணைந்து ‘டிக் டிக் டிக்’ என்ற படத்தில் ரவி மோகனின் மகனாகவே நடித்து அனைவரது கவனம் பெற்றார். இந்த போட்டோவிற்கு கீழ் சில நெட்டிசன்கள் ‘எப்படி இருந்த குடும்பத்தை இப்படி பிரித்துவிடீர்களே” என்று கெனிஷாவை சாடி வருகின்றனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக கெனிஷா, ‘‘இப்படி கேட்பவர்கள் முதலில் உங்கள் முகத்தை காட்டுங்கள், பிறகு கேள்வியை கேளுங்கள்’’ என்று பதிலளித்துள்ளார்.

Tags : Kenisha ,Ravi Mohan ,Aarthi ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்