×

இன்ஜினியர் வீட்டில் 90 பவுன் கொள்ளை

திருச்சி: திருச்சியில் இன்ஜினியர் வீட்டில் புகுந்து 90 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருச்சி உறையூர் ராமலிங்கநகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியில் வசிப்பவர் செந்தில்நாதன். அபுதாபியில் இன்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி கனிமொழி கடந்த 1ம் தேதி3 குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு சீர்காழியில் உள்ள தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். ஆயுதபூஜை முடிந்து நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோ உடைக்கப்பட்டு 90 பவுன் நகை மற்றும் ரூ.70ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம். புகாரின்படி உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையரை தேடி வருகின்றனர்….

The post இன்ஜினியர் வீட்டில் 90 பவுன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Udhayur Ramalinganagar ,Extension Area ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான இ- சிகரெட்கள் பறிமுதல்