×

போலீஸ் அதிகாரி வேடத்தில் கவுதம் ராம் கார்த்திக்

சென்னை: வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தனிஷ்டன் பெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர், ஷேக் முஜீப் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடை யான்’ என்ற படத்தில் அசோசி யேட் டைரக்டராக பணியாற்றிய சூரியபிரதாப் எழுதி இயக்குகிறார்.

பான் இந்தியா படமான இது, சயின்ஸ் பிக்‌ஷன் கிரைம் திரில்லராக உருவாகிறது. போலீஸ் அதிகாரி வேடத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்
கிறார். அர்ஜூன் ராஜா ஒளிப் பதிவு செய்ய, விதூஷணன் இசை அமைக்கிறார். ஜான் ஆபிரஹாம் எடிட்டிங் செய்ய, மிராக்கிள் மைக்கேல் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். விரைவில் சென்னை புறநகரில் படப்பிடிப்பு தொடங்கி நடக்கிறது.

 

Tags : Gautham Ram Karthik ,Chennai ,Thanishthan Fernando ,Rajarajan Gnanasambandham ,Sanjay Shankar ,Sheikh Mujeeb ,Veroos Productions ,Suriya Pratap ,Soundarya Rajinikanth ,
× RELATED உடலழகை எடுப்பாக காட்ட வற்புறுத்தினார்கள்: ராதிகா ஆப்தே கடும் தாக்கு