
சேகர் கம்முலா இயக்கத்தில் நாகர்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 20ம் தேதி வெளியான படம் ‘குபேரா’. இப்படத்தில் யாசகர் வேடத்தில் தனுஷ் வாழ்ந்திருக்கிறார் என்று பலரால் பாராட்டப்பட்டது. அந்தவகையில் படத்தின் நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா தனுஷை பச்சோந்தியுடன் ஒப்பிட்டு பேசியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.செட்டில் தனுஷ் பல விஷயங்களை செய்தாலும் கேமராவுக்கு முன்பு நின்றுவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறாராம்.
இப்படி ஒரே நேரத்தில் பல விஷயங்களில் கவனம் செலுத்தும் தனுஷ் டேக் என இயக்குநர் சொல்லும்போது அனைவரும் வியக்கும் வகையில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு கேரக்டர் கொடுத்தால் அதுவாகவே மாறிவிடுகிறார். இதை மனதில் வைத்துதான் தனுஷை பச்சோந்தியுடன் ஒப்பிட்டு பேசியதாக தெரிவித்துள்ளார் நாகர்ஜுனா. நாகர்ஜூனாவின் இந்த பேச்சை கேட்ட தனுஷ் ரசிகர்கள் முதலில் அவர் மீது கோபமடைந்தாலும் பின்னர் அவரது விளக்கத்தை கேட்டு பூரிப்படைந்து வருகின்றனர்.
