×

இருமுனை

சென்னை: பவி வித்யா லட்சுமி புரொடக்‌ஷன் தயாரிப்பில் ‘திரும்பிப்பார்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கிரி வித்தியாசமான கதாபாத்திரத்தில் இரண்டாவது படமாக ‘இருமுனை’ என்ற திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சஜினி பாண்டியன், மதுமிதா, ஜகா, குழந்தை நட்சத்திரமாக முக்கிய கதாபாத்திரத்தில் ஆலிசன் மற்றும் முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.

படத்துக்கு ஒளிப்பதிவு – தினேஷ். இசை – பாசில். எடிட்டர் – சசிகுமார். இயக்குனர் கிரி கூறும்போது, ஒரு குடும்பத்தில் கணவன் சம்பாதித்தால் எப்படி பட்ட மரியாதை கிடைக்கும் வேலை இருந்தும் போதிய வருமானம் இல்லாத கணவனுக்கு எப்படி பட்ட மரியாதை கிடைக்கும் அந்த சூழ்நிலையில் அந்தப் பெண் எப்படிப்பட்ட பெண்ணாக மாறுகிறாள் என்பதை உணர்த்தும் படமாக இன்றை காலத்துக்கு ஏற்ப இத்திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது’ என்றார்.

Tags : Chennai ,Kiri ,Bavi Vidya Lakshmi Productions ,Sajini Pandian ,Madhumita ,Jaga ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்