×

இரட்டை இயக்குனர்களின் படத்தில் விமல்

சென்னை: மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘ககனச்சாரி’, ‘பொன்மேன்’ உள்பட பல்வேறு படங்களை தயாரித்த அஜித் விநாயகா பிலிம்ஸ் புரொடக்‌ஷன் சார்பில், தமிழில் விநாயகா அஜித் தயாரிக்கும் படத் துக்கான தொடக்க விழா பூஜை காரைக்குடியில் நடந்தது. இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் எல்சன் எல்தோஸ், மனிஷ் கே தோப்பில் இயக்குகின்றனர். கிராமத்து பின்னணியில் காமெடி படமாக உருவாகும் இதன் தலைப்பு முடிவாகவில்லை. விமல், முல்லை அரசி, சேத்தன், ‘பருத்திவீரன்’ சரவணன் உள்பட பலர் நடிக்கின்றனர்.

எழுத்தாளர் பாசில் ஜார்ஜ், ஆகாஷ் வி பால் இணைந்து உருவாக்கிய கதைக்கு சுதி கிருஷ்ணா திரைக்கதை எழுதியுள்ளார். ‘பார்க்கிங்’ ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர், மருது பெரியசாமி இணைந்து வசனம் எழுதுகின்
றனர். மதன் எடிட்டிங் செய்ய, ராஜ்கமல் அரங்கம் அமைக்கிறார். பீனிக்ஸ் பிரபு சண்டைப் பயிற்சி அளிக்கிறார். காரைக்குடியில் ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடந்து முடிகிறது.

 

Tags : Chennai ,Ajith Vinayaka Films Productions ,Vinayaka Ajith ,Elson Elthos ,
× RELATED தீபிகா படுகோனேயுடன் லெஸ்பியனாக நடிக்க ஆசை: கிரித்தி சனோன் பகீர்