×

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முரளிதர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் முடிவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய தலைமை நீதிபதியாக முரளிதர் நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய நீதிபதியாக இருந்த முனீசுவர்நாத் பண்டாரி ஒய்வு பெற்றதை அடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி சில காலம் இருந்தார். அவரும் ஒய்வு பெற்றதை அடுத்து தற்போது சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜா இரண்டாவது நிலையில் இருந்தார். இந்த நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக தற்போது ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கக்கூடிய முரளிதர் என்பவரை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன் அடிப்படையில் நியமனம் உத்தரவு வரவேண்டியது இருக்கிறது. டெல்லி கலவர வழக்கில் ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிபதி முரளிதர் உத்தரவு பிறப்பித்தார். தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட நீதிபதி முரளிதர் 2006-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். இந்நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் முரளிதர் சென்னை சட்டக்கல்லூரியில் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒடிஸா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள முரளிதரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்திருக்கிறது. யு.யு.லலித் தலைமையில் நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர் ஆவார். டெல்லியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க.வினரை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியதால் இரவோடு இரவாக பணியிடமாற்றப்பட்டார்….

The post சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முரளிதர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chief Justice ,Muralithar ,Supreme Court ,U. ,Colizium ,Lalit ,Chennai ,Munisuarnath Bandari ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...