×

பஞ்சாப் சட்டப் பேரவையில் மான் நம்பிக்கை வாக்கெடுப்பு: தீர்மானம் தாக்கல்

புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில், முதல்வர் பகவந்த் மான் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை  தாக்கல் செய்தார். பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ.க்களை தலா ரூ.25 கோடிக்கு பாஜ பேரம் பேசி இழுத்து, ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக இக்கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் சமீபத்தில் குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் தனது பலத்தை நிரூபிக்க, கடந்த 22ம் தேதி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூட்டினார். ஆனால், இக்கூட்டத்தை கூட்டுவதற்கான அனுமதியை 21ம் தேதி மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீரென ரத்து செய்தார். இதனால், அவருக்கும் முதல்வர் மானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பஞ்சாப் சட்டப்பேரவையை 27ம் தேதி கூட்ட, அமைச்சரவை கூட்டத்தில் மான் தீர்மானம் நிறைவேற்றினார். அதற்கு ஆளுநரும் ஒப்புதல் கொடுத்ததை தொடர்ந்து, நேற்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்பட்டது. இதில், முதல்வர் மான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ எம்எல்ஏ.க்கள் 2 பேரும் வெளிநடப்பு செய்தனர்….

The post பஞ்சாப் சட்டப் பேரவையில் மான் நம்பிக்கை வாக்கெடுப்பு: தீர்மானம் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Punjab Legislation ,CM ,Bhagavant Mann ,Punjab ,Punjab Law Assembly ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி