×

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆமிர்கான்

மும்பை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஆமிர்கானுடன் ஒரு படம் பண்ணவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஆமிர்கான் பிறந்தநாளான ஏப்ரல் 22ம் தேதி தனது எக்ஸ் பக்கம் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ், அவருடன் சந்திப்பு மேற்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். மேலும் இனிவரும் ஆண்டுகளில் திரையில் மேலும் மேஜிக்கை உருவாக்குவதற்காக அந்த சந்திப்பு என கூறியிருந்தார். இந்த நிலையில், ஆமிர்கான் லோகேஷ் கனகராஜுடன் படம் செய்வதை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர் “லோகேஷும் நானும் ஒரு படத்தில் இணைகிறோம். அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அது ஒரு சூப்பர் ஹீரோ படம். பெரிய பொருட்செலவில் எடுக்கக்கூடிய ஆக்‌ஷன் படமாக இது இருக்கும். அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் பட பணிகள் தொடங்கும்” என்று கூறியுள்ளார்.

Tags : Lokesh Kanagaraj ,Aamir Khan ,Mumbai ,Rajinikanth ,Sun Pictures ,Bollywood ,
× RELATED உடலழகை எடுப்பாக காட்ட வற்புறுத்தினார்கள்: ராதிகா ஆப்தே கடும் தாக்கு