சென்னை: பிரமாண்டமாக உருவாகி வரும் மறைந்த இராம.வீரப்பன் பற்றிய ‘ஆர்.எம்.வி: தி கிங் மேக்கர்’ என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. சத்யா மூவிஸ் தயாரித்துள்ளது. மூத்த அரசியல் தலைவரும், சத்யா மூவிஸ் நிறுவனரும், தயாரிப்பாளருமான இராம.வீரப்பன், தமிழக அரசியல் மற்றும் திரையுலக வரலாற்றில் முக்கியமான ஆளுமையாக இருந்தவர்.
அவரைப்பற்றிய ஆவணப்படத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தர்மபுரம் ஆதீனம், காஞ்சிப் பெரியவர், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, சுரேஷ் கிருஷ்ணா, பாடலாசிரியர்கள் வைரமுத்து, முத்துலிங்கம் ஆகியோர் பங்கேற்று, இராம.வீரப்பனுடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

