×

ஷாருக்கானுடன் விஜய் சந்திப்பு

சென்னை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சென்னையில் நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார். ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியவர் அட்லீ. அடுத்ததாக ஷாருக்கான் நடித்து தயாரிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இதில் தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் அட்லீ நடத்தி வருகிறார். இதில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் தனது காட்சிகளை முடித்துக்கொண்டு தீபிகா மும்பை சென்றுவிட்டார். ஷாருக்கான் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்நிலையில், அட்லீக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் வந்தது. இதையடுத்து அவரை வாழ்த்துவதற்கும், ஷாருக்கானை சந்திப்பதற்கும் படப்பிடிப்புத் தளத்துக்கு விஜய் வந்திருந்தார். அப்போது அவரை கட்டித்தழுவி ஷாருக்கான் வரவேற்றார். பிறகு ஷாருக்கானுடன் இணைந்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பிறகு அட்லீயுடன் சேர்ந்தும் அவர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர். விஜய் நடித்து வரும் வாரிசு படம் குறித்து ஷாருக்கான் கேட்டறிந்தார். அப்படத்தின் பணிகள் எந்தளவுக்கு முடிந்துள்ளது என்றும் கேட்டார். இந்நிலையில், ஜவான் படத்தில் ஒரு காட்சியில் விஜய் நடிப்பதாக தகவல் பரவியது. ஆனால், இதில் விஜய்க்கான காட்சிகள் எதுவும் கிடையாது என்று படக்குழு மறுத்துள்ளது….

The post ஷாருக்கானுடன் விஜய் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Vijay ,Shahrukh Khan ,Chennai ,Bollywood ,Shah Rukh Khan ,Raja Rani ,
× RELATED ஷாருக்கானுடன் மீண்டும் இணைந்த அனிருத்