×

பாரதிராஜா மீண்டும் அட்மிட்

சென்னை: இயக்குனர் மற்றும் நடிகர் பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரதிராஜா (81), ஆல்டெர்டு சென்சோரியம் பாதிப்புகளுடன் ஆகஸ்ட் 26ம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூ பிரிவில் பல்துறை மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பிறகு படிப்படியாக அவரது உடல்நிலை சீரானது. இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் ஆனார். மூளையில் ஏற்படும் குழப்பமான நிலை, நினைவு இழப்பு, வழக்கத்துக்கு மாறாக அல்லது விநோதமாக நடந்துகொள்வது உள்ளிட்டவை ஆல்டெர்டு சென்சோரியம் (Altered sensorium)என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாரதிராஜாவுக்கு நேற்று முன்தினம் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட் டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக குழாயில்  ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படு கிறது….

The post பாரதிராஜா மீண்டும் அட்மிட் appeared first on Dinakaran.

Tags : Bharathiraja ,Chennai ,Bharatraja ,Alderd ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்