×

சுப்ரீம்கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி ஓய்வு: பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 3 ஆக குறைவு

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி நேற்றுடன் ஓய்வு பெற்றதால், உச்சநீதிமன்றத்தின் பெண் நீதிபதிகளின் எண்ணிக்ைக மூன்றாக குறைந்தது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி, கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நேற்றுடன் அவர் பணி ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் பேசுகையில்: ‘சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திரா பானர்ஜி நீதித்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டுகிறேன்’ என்று பேசினார். தொடர்ந்து இந்திரா பானர்ஜி பேசுகையில், ‘உச்ச நீதிமன்றத்தில் வரும் காலங்களில் அதிக பெண் நீதிபதிகள் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று அவர் கூறினார். இந்திரா பானர்ஜி ஓய்வு பெற்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தற்போது மூன்று பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். தற்போது ஓய்வுபெற்றுள்ள நீதிபதியான இந்திரா பானர்ஜி, ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post சுப்ரீம்கோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி ஓய்வு: பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 3 ஆக குறைவு appeared first on Dinakaran.

Tags : Supremcourt ,Indira Panerjhi ,New Delhi ,Supreme Court ,Justice ,Supreamcourt ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...