×

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இலங்கையில் இருந்து கஞ்சா ஏற்றுமதி: மருத்துவத்துறை அமைச்சர் தகவல்

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,  அன்னிய முதலீட்டை ஏற்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  ஆங்கிலேய படையெடுப்புக்கு முன்னர் இலங்கையில் இருந்து போதை பொருளான கஞ்சா  ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கஞ்சா  ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில்  மீண்டும் கஞ்சா ஏற்றுமதிக்கு இலங்கை அரசு ஆர்வம் காட்டி வருகிறது.  இதுகுறித்து இலங்கை மருத்துவ துறை அமைச்சர் சிசிர ஜயக்கொடி கூறுகையில்:  ‘கஞ்சாவை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிகளவு வருமானத்தை ஈட்ட முடியும். கஞ்சா ஏற்றுமதியை சட்டமாக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தங்கள் செய்யப்படும். வரும் 5ம் தேதிக்குள் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும். உள்நாட்டு மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் மூலம் இலங்கையினால் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்ட முடியும். எனவே கஞ்சா ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. உலகளவிலான கஞ்சா சந்தையில் நான்கு டிரில்லியன் அளவிற்கு கஞ்சாவிற்கான தேவை இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதனால் அந்த வாய்ப்பை இலங்கை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது’ என்றார்….

The post நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இலங்கையில் இருந்து கஞ்சா ஏற்றுமதி: மருத்துவத்துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Minister of Medicine ,Colombo ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...