- ராஜசேகர் ரெட்டி
- ஜெகன் என்டிஆர் பல்கலைக்கழகம்
- தெலுங்கு தேசம் கட்சி
- திருமலா
- என்டிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்
- ஆந்திரப் பிரதேசம்
- ராஜசேகர் ரெட்டி பல்கலைக்கழகம்...
- தின மலர்
திருமலை: ஆந்திராவில் என்டிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் பெயர் இரவோடு இரவாக ராஜசேகர் ரெட்டி பல்கலைக் கழகமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம், விஜயவாடாவில் ‘டாக்டர் என்டிஆர் சுகாதார அறிவியல் பல்கலைக் கழகம்’ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பல்கலை கழகத்தின் பெயரை நேற்று முன்தினம் இரவோடு இரவாக, ‘டாக்டர் ஒய்எஸ்ஆர் ஆரோக்யா பல்கலைக் கழகம்,’ என்று முதல்வர் ஜெகன் மோகன் மாற்றம் செய்துள்ளார். இதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் சட்டப்பேரவையில் இருந்து துள்ளூர் காவல் நிலையம் வரை பேரணியாக சென்று தீர்மான நகலை கிழித்து தீ வைத்து கொளுத்தினர். மேலும், இந்த பெயர் மாற்றத்துக்கு தெலுங்கு தேசம், ஜனசேனா உள்ளிட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன….
The post ராஜசேகர் ரெட்டி பெயரை சூட்டினார் ஜெகன் என்டிஆர் பல்கலை பெயர் இரவோடு இரவாக மாற்றம்: தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு appeared first on Dinakaran.
