மீண்டும் இணைந்த விஷால், தமன்னா

கத்திச்சண்ட படத்துக்கு பிறகு மீண்டும் விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கும் படத்தை  இயக்குகிறார், சுந்தர்.சி. ஏற்கனவே மதகஜராஜா, ஆம்பள  படங்களில் விஷாலை இயக்கினார், சுந்தர்.சி. இதில் மதகஜராஜா பல்வேறு  பிரச்னைகளால் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், டிரைடன்ட் ஆர்ட்ஸ்  ரவீந்திரன் தயாரிக்கும் படத்தின் மூலம் சுந்தர்.சியுடன் மீண்டும் இணைகிறார்  விஷால். மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். சிம்பு  நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தை இயக்கி ரிலீஸ் செய்த பிறகு விஷால் படத்தை இயக்குகிறார் சுந்தர்.சி.

Tags : Vishal ,Tamanna ,
× RELATED இளையராஜா இசையில் விஷால்