×

தொடரும் பட வெற்றி செங்கோட்டை முருகன் கோயிலுக்கு மோகன்லால் வேல் காணிக்கை

சென்னை: ‘தொடரும்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் புகழ்பெற்ற பண்பொழி திருமலை முருகன் கோயிலுக்கு மோகன்லால் வருகை புரிந்தார். இந்த வருகையின் முக்கிய நோக்கம், படத்திற்கு கிடைத்த அமோக வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கோயிலில் வேல் காணிக்கை செலுத்தி முருகப்பெருமானை தரிசிப்பதாகும் என அவர் தெரிவித்தார். ‘தொடரும்’ திரைப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், படத்திலுள்ள ஒரு முக்கியமான பாடல் வரி, இந்த வெற்றிக்கு மேலும் வலுசேர்த்தது. ‘கொண்டாட்டம்’ என்ற உற்சாகமான பாடலில், ‘‘திருமலை முருகனுக்கு அரோகரா” என்ற வரி இடம்பெற்றிருந்தது. இந்த வரி, ரசிகர்களிடையே குறிப்பாக முருகன் பக்தர்களிடையே ஒருவித நெருக்கத்தையும், உணர்வுபூர்வமான தொடர்பையும் ஏற்படுத்தியது. இந்தப் பாடலின் வெற்றி, படத்தின் ஒட்டுமொத்த வெற்றிக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக அமைந்தது என்கிறது படக்குழு.

Tags : Mohanlal ,Sengottai Murugan temple ,Chennai ,Panpozhi Tirumala Murugan temple ,Sengottai ,Tenkasi district ,
× RELATED ‘என் ஹேர்ஸ்டைல் பிடிச்சிருக்கா…? ‘தி...