×

ராணுவ வீரர்களை சந்திக்கிறார் ஹுமா குரேஷி

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு, காஷ்மீரிலுள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுகள் குவிந்தது. அந்தவகையில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி ஜம்மு, காஷ்மீருக்கு நேரில் செல்வதுடன், எல்லையோர பாதுகாப்பு வீரர்களை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவிக்கிறார். அப்போது ராணுவ வீரர்கள், ஜவான்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை சந்தித்து, அவர்களின் வீரம் மற்றும் தியாகங்களை பறைசாற்றுகிறார்.

மேலும், அன்று மாலை ஜம்மு, காஷ்மீரின் பாரம்பரியம் குறித்து நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். எல்லையில் நம்மை பாதுகாக்கும் வீரர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் மற்றும் ஜம்மு, காஷ்மீரின் இயற்கை அழகை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் ஹுமா குரேஷி செல்வதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியில் ராஜ்குமார் ராவ் நடிக்கும் ‘மாலிக்’, அக்‌ஷய் குமாருடன் ‘ஜாலி எல்எல்பி 3’, கன்னட ஹீரோ யஷ் நடிக்கும் ‘தி டாக்ஸிக்’ ஆகிய படங்களில் நடிக்கும் ஹுமா குரேஷி, மேற்ெகாண்டு ‘பூஜா மேரி ஜான்’, ‘குலாபி’, ‘பயான்’ ஆகிய படங்களிலும் நடிக்கிறார்.

Tags : Huma Qureshi ,Pahalgam, ,Jammu and ,Kashmir ,Indian Army ,Operation ,
× RELATED மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்