×

திருவள்ளூர் அருகே பரபரப்பு கார் டிரைவர் வீட்டை உடைத்து: 11 சவரன் கொள்ளை

திருவள்ளூர்: கார் டிரைவரின் வீட்டை உடைத்து 11 சவரன் நகையை  மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போளிவாக்கம் பணந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (39). இவர், தொடுகாடு ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசனிடம் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். தனசேகரின் மனைவி லட்சுமி, மருந்தாளுநர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 17ம் தேதி குடும்பத்துடன் கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து மறுநாள் இரவு தனது வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 11 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. புகாரின்படி, மணவாளநகர் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடுகின்றனர்….

The post திருவள்ளூர் அருகே பரபரப்பு கார் டிரைவர் வீட்டை உடைத்து: 11 சவரன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Sawaran ,Tiruvallur ,Manavalanagar… ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது