×

ஜான்வி கபூர் டீசர் கசிந்ததால் பரபரப்பு

இந்தியில் துஷார் ஜலோடா இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் நடிக்கும் படம், ‘பரம் சுந்தரி’. பஞ்சாப்பை சேர்ந்த ஆணுக்கும், தென்னிந்திய பெண்ணுக்கும் இடையிலான காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பரபரப்பு ஏற்படுத்தியது. வரும் ஜூலை 25ம் தேதி படம் வெளியாகிறது. இந்நிலையில், ‘பரம் சுந்தரி’ படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்தது.

இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், டீசரை அவசரமாக வெளியிடும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து இந்தியில் ராஜ்குமார் ராவ், வாமிகா கஃபி நடிப்பில் வெளியான ‘போல் சக் மாஃப்’ என்ற படத்தின் காட்சிகளின் போது ‘பரம் சுந்தரி’ டீசர் ஒளிபரப்பப்பட்டது. திரையரங்கில் இதை பார்த்த ரசிகர்கள், அதையும் வீடியோ எடுத்து இணையதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால் படக்குழுவினர் கடும் விரக்தியில் இருக்கின்றனர்.

Tags : Janhvi Kapoor ,Sidharth Malhotra ,Tushar Jalota ,
× RELATED மாடியில் மயக்கிய பூனம் பஜ்வா