×

கலைத்துறையில் சாதனை படைத்த 15 கலைஞர்கள் விருதுக்கு தேர்வு: கலெக்டர் அமிர்த ஜோதி தகவல்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தின் கலைகளை மேம்படுத்தவும், கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலைமன்றம் வாயிலாக கலை விருதுகள் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலைமன்ற கூட்டம் எனது தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், கலை பண்பாட்டுத்துறையின் துணை இயக்குநர் பா.ஹேமநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வ.பாலசுப்பிரமணியம், சுற்றுலா அலுவலர் சின்னசாமி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ப.பத்மா, தமிழக அரசு இசைக்கல்லூரி முதல்வர் பா.சாய்ராம், அரசு கவின்கலைக் கல்லூரி முதல்வர் சே.ராஜேந்திரன், டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பரதநாட்டிய விரிவுரையாளர் ஸ்ரீலதா வினோத், நாட்டுப்புற கலைஞர் கலை வளர்மணி அமானுல்லா ஆகியோர் கலந்து கொண்டு விருதாளர்களை தேர்வு செய்தனர். கலை முதுமணி விருதுக்கு குரலிசை கலைஞர் கி.ராமமூர்த்தி ராவ், மேடை நாடக்கலைஞர்  கோ.பாலகிருஷ்ணன், ஒவியர் ஏ.ராஜ்மோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலை நன்மணி விருது- வயலின் கலைஞர் ஆர்.செல்வராஜ், சிலம்பாட்டம் மற்றும் நடிகர் எம்.சி.ராஜகுரு, ஆர்மோனியம் மற்றும் கீ போர்ட் கலைஞர் பி.ஆர்.வெங்கடசுப்பிரமணியன். கலைச்சுடர்மணி விருது-தவில் கலைஞர் எஸ்.வடிவேல், பரதநாட்டியக்கலைஞர் சு.சுபஸ்ரீ, புல்லாங்குழல் கலைஞர் ஆர்.அதுல்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலை வளர்மணி விருது- புரவியாட்டக்கலைஞர் ஆர்.கஜேந்திரன், நாதஸ்வரக்கலைஞர் மயிலை எம்.கார்த்திகேயன் குரலிசைக்கலைஞர் க.ஜோதி. கலை இளமணி விருது- வி.லோகேஷ் (இயல்), சு.சஹாணா(பரதநாட்டியம்), ஸ்ரீஸ்வார்த்மிகா (குரலிசை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கலைத்துறையில் சாதனை படைத்த 15 கலைஞர்கள் விருதுக்கு தேர்வு: கலெக்டர் அமிர்த ஜோதி தகவல் appeared first on Dinakaran.

Tags : Collector ,Amrita Jyoti ,Chennai ,District ,S. Amirtha Jyoti ,Tamil Nadu ,Amirtha Jyoti ,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...