×

தமிழ் கற்க தடுமாறும் ஆஷிகா

அதர்வா முரளியுடன் ‘பட்டத்து அரசன்’, சித்தார்த்துடன் ‘மிஸ் யூ’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத். தற்போது கார்த்தியுடன் ‘சர்தார் 2’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘தெலுங்கில் நான் நடித்த ‘நா சாமி ரங்கா’ என்ற படத்தை பார்த்த பிறகு ‘சர்தார் 2’ பட தயாரிப்பாளர் என்னை தொடர்புகொண்டார். அந்த படத்தில் பாரம்பரியமான கிராமத்து பெண்ணாக நடித்தேன். ‘சர்தார் 2’ படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்து வருகிறேன். மாளவிகா மோகனனுடன் எனக்கு காம்பினேஷன் காட்சிகள் இல்லை.

கார்த்தி சாருடன் நடித்ததில் அதிக மகிழ்ச்சி. இப்போது எனக்கு தமிழ் புரிய ஆரம்பித்துள்ளது. பல்வேறு மொழிகளில் பணியாற்றுவது என்னை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது. தமிழ் கற்றுக்கொள்வது மட்டுமே ரொம்ப சிரமமாக இருக்கிறது. தும்கூரை சேர்ந்த எனது தாய்மொழி கன்னடம். தமிழிலோ, தெலுங்கிலோ பேசும் நண்பர்கள் எனக்கு கிடையாது. தெலுங்கு படங்களை மட்டுமே பார்த்து வளர்ந்ததால், தெலுங்கில் சரளமாக பேசுவேன். பல மொழிகளை கற்றுக்கொள்வது, ஒரு நடிகையான எனக்கு அதிக பயன் தரும் என்று நம்புகிறேன். விரைவில் தமிழில் சரளமாக பேசுவேன்’ என்றார்.

Tags : Aashika ,Aashika Ranganath ,Atharva Murali ,Siddharth ,Karthi ,Chiranjeevi ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி