
திருவனந்தபுரம்: தமிழில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’, மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ஹிருதயப்பூர்வம்’, தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பிரபாஸ் குறித்து அவர் கூறுகையில், ‘பிரபாஸை நான் சந்திப்பதற்கு முன்பு அவரது பேட்டிகளை பார்த்திருக்கிறேன். அப்போது அவர் மிகவும் அமைதியான, அதிகம் பேசாத ஒருவர் என்று நினைத்தேன்.
ஆனால், அவரை நேரில் சந்தித்தபோதுதான், அவர் அற்புதமாக பேசக்கூடியவர், மிகவும் வேடிக்கையானவர் என்று தெரிந்தது. அவரைச் சுற்றிலும் எப்போதும் உற்சாகம் இருக்கும். தவிர, எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மம்மூட்டியா, மோகன்லாலா என்று பலர் கேட்டனர். அந்த இருவரில் ஒருவர், என்னை திரையுலகில் அறிமுகம் செய்தவர். மற்றொருவருடன் இப்போது ஒரு அற்புதமான படத்தில் நடித்துள்ளேன். எனவே, இதை நியாயம் இல்லாத கேள்வியாகவே நினைக்கிறேன்’ என்றார்.
