×

ஓடும் ரயிலில் வாலிபர் பலி

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி நியூ பேரன்ட்ஸ் சாலையை சேர்ந்தவர் சையத் பரூக் (28), எலக்ட்ரீஷியன். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த யூசுப் (28). இதில், சையத் பரூக்கின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று விட்டார். அவர் தற்போது மும்பையில் உள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் கடந்த 15ம் தேதி மாலை  மும்பையில் உள்ள  சையத் பரூக்கின்  மனைவியை பார்ப்பதற்காக ரயில் மூலம் சென்றுள்ளனர். அங்கிருந்து  நேற்று முன்தினம் இரவு ரயில் மூலமாக சென்னை நோக்கி இவர்கள்  வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சையத் பருக் சுயநினைவை இழந்தார். இந்நிலையில்,  பெரம்பூர் ரயில் நிலையம் வந்தவுடன் உடனடியாக  யூசுப் தனது நண்பர்களுக்கு போன் செய்து அவர்களை வரவழைத்தார். பின்னர், அவர்கள் சையத் பருக்கை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு,  ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த யூசுப் சையத் பரூக்கின் உடலை அவர் வீட்டிற்கு கொண்டு சென்றார். தகவலறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சையத் பரூக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், உயிரிழந்த சையத் பரூக்கிற்கு மஞ்சள் காமாலை இருந்து வந்ததும், தொடர்ந்து அவர் போதை பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிந்து யூசுப்பிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post ஓடும் ரயிலில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Wolvier ,Perampur ,Chennai Otteri New Bharants Road ,Syed Barook ,
× RELATED பெண் காவலரிடம் தகராறு செய்தவர் கைது