மும்பை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, சமீபகாலமாகத் தனது சொந்த வாழ்க்கை காரணமாகச் செய்திகளில் அடிக்கடி இடம்பெற்று வருகிறார். நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் டேட்டிங் செய்கிறார் என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. சமீபத்தில் ராஜ் நிடிமொருவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டார். இதையடுத்து ராஜ் நிடிமொருவின் மனைவி ஷியாமலி டே, இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை வைத்து என்னிடம் நலம் விசாரித்த அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என கோபமாக பதிவு போட்டார்.
இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்மா குறித்துப் பகிர்ந்துள்ள பதிவு, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘‘நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு கர்மா உங்களைத் தேடி வந்து ஆசீர்வதிக்கும். நீங்கள் செய்த தீய செயல்களுக்குக் கர்மா உங்களைப் பின்தொடரும். அது உங்களைத் தேடி வந்து தண்டிக்கும். உங்கள் ஆன்மா மலரட்டும்’’ என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் சமந்தாவை எச்சரித்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து கூறுகின்றனர்.
